விநாயகர் சதுர்த்தி வரவுள்ளதையொட்டி, உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் சூடுபிடித்துள்ளது.

231

விநாயகர் சதுர்த்தி வரவுள்ளதையொட்டி, உளுந்தூர்பேட்டையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் சூடுபிடித்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் ஆவணி மாதம் சுக்கிலபட்ச சதுர்த்தித் திதியன்று விநாயக சதுர்த்தி கடைபிடிக்கப்படுகின்றது. அன்றைய தினம் இந்து மக்கள், பக்தியோடு விநாயகரை வழிபட்டு , உண்ணா நோன்பிருந்து, விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்து வழிவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, உளுந்தூர்பேட்டையில், விநாயகர் சிலைகள் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உளுந்தூர்பேட்டை-சேலம் சாலையில் விநாயகர் சிலைகள் விற்கும் மையம் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 3 அடி முதல் 13 அடி உயரம் வரை விநாயகர் சிலைகள் பல வடிவங்களில் செய்யப்பட்டுள்ளது. சிலைகள் வடிவமைக்கும் பணிகள் நிறைவடைந்த நிலையில் அவற்றிற்கு வண்ணம் பூசும் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன. விநாயகர் சிலைகள் வாங்க இதுவரை விழுப்புரம், கள்ளக்குறிச்சி வரை சென்று வாங்க வேண்டிய நிலைமையில் உளுந்தூர்பேட்டை பகுதி மக்கள் இருந்ததாகவும், தற்போது உள்ளூரிலேயே சிலைகள் கிடைப்பதால் அப்பகுதி பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.