3 குழந்தைகளை கொன்று தாயும் தற்கொலை..!

313

திருக்கோவிலூர் அருகே 3 குழந்தைகளை எரித்துக் கொன்ற தாயும் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூரை சேர்ந்த இளங்கோவன்-தனலட்சுமி தம்பதியருக்கு 3 குழந்தைகள் உள்ளன. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கணவன் வெளியில் சென்றிருந்த சமயத்தில் தனது குழந்தைகளான கமலேஸ்வரன், விஷ்ணுபிரியன் மற்றும் பிறந்து 3 மாதமே ஆன உத்திரன் ஆகியோர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்த தனலட்சுமி, பின்னர் தானும் தற்கொலை செய்துக்கொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் கருகிய நிலையிலிருந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவர்களின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கோர தற்கொலை சம்பவம் அரகண்டநல்லூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.