விழுப்புரத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வனச்சரகர் மற்றும் வனத்துறை மண்டல மேலாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

225

விழுப்புரத்தில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய ஓய்வு பெற்ற வனச்சரகர் மற்றும் வனத்துறை மண்டல மேலாளருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம் காடாம்புலியூர் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம், இவர் பண்ருட்டி அருகே வனத்துறைக்கு சொந்தமான முந்திரி மரங்களை வெட்டுவதற்கு 55 ஆயிரத்து 200 ரூபாய் முன்வைப்புத் தொகையாக கட்டினார். ஏலம் எடுத்த மரங்களை வெட்டிய பிறகு வனத்துறை மண்டல மேலாளராக இருந்த மகிலனிடமும், வனச்சரகர் கிருஷ்ணமூர்த்தியிடமும் முன்வைப்புத்தொகையை கேட்டதாக கூறப்படுகிறது. முன்வைப்புத்தொகையை வழங்க இருவரும் 25 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளனர். அதிர்ச்சியடைந்த ராமலிங்கம் கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கொடுத்தையடுத்து இருவரும் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் மகிலன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டு விழுப்புரம் ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட வனச்சரகர் கிருஷ்ணமூர்த்திக்கு 3 ஆண்டு சிறை, 6 ஆயிரம் அபராதமும், வனத்துறை மண்டல மேலாளர் மகிலனுக்கு 2 ஆண்டு சிறை மற்றும் 5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.