முதல்வருடன் திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட எம்எல்ஏக்கள் சந்திப்பு!

577

திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் மாவட்ட அதிமுக எம்எல்ஏக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.
தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களின் நிலைப்பாடு, ஆளுநரின் கைவிரிப்பு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தநிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்தனர். கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் இல்லத்தில் இந்தக் கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையிலும், திருச்சி மாவட்ட எம்எல்ஏக்கள் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தலைமையிலும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அமைச்சர் ராஜலட்சுமி தலைமையில், நெல்லை மாவட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வரை சந்தித்தனர். தினகரன் நடவடிக்கையை எதிர்கொள்வது, அதிமுக பொதுக்குழுவில் விவாதிக்க வேண்டிய அம்சங்கள், தொகுதி பிரச்சினை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.