மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல்..!

380

லஞ்சப் புகாரில் கைதான மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் 35 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பாபு என்பவர், வாகன தகுதி சான்று பெற 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்ற போது கையும், களவுமாக பிடிபட்டார். இடைத்தரகர் செந்தில்குமாரும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் கடலூர் மாவட்டம் செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள பாபுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சோதனையின் போது அவரது வீட்டில் இருந்து 35 லட்ச ரூபாய் பணம், 200 சவரன் தங்க நகைகள், 15 கிலோ வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் 45 வங்கி கணக்கு புத்தகங்கள், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இடம் வாங்கியது தொடர்பான 505 பத்திரங்கள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் பாபுவுக்கு 6 வங்கிகளில் லாக்கர் இருப்பதும், இன்று அவரது லாக்கர்களையும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.