விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

228

விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே பெண்ணை தாக்கி சங்கிலி பறிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் அருகே மளிகை கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர், இவர் வெளியூர் சென்றிருந்த நிலையில், அவரது மனைவி திவ்யா, மளிகை கடையை கவனித்து வந்தார். இந்தநிலையில் மளிகை கடையில் பொருள் வாங்குவது போல் வந்த நபர், திவ்யா அணிந்திருந்த 5 சவரன் நகையை பறிக்க முயன்றார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அங்கிருந்தவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்ட இளஞரை மடக்கிப் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அந்த நபர் விழுப்புரம் தாலுகா காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் நடத்திய விசாரணையில் சங்கிலி பறிப்பில் ஈடுபட்ட நபர் பெரியகாலனி பகுதியை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வன் என்பது தெரியவந்துள்ளது. மாவட்ட காவல்துறை அலுவலகம் அருகே அடிக்கடி கொள்ளை சம்பவங்கள் நடைபெறுவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.