இடைத்தேர்தல் ரத்து – தேர்தல் ஆணையம் விளக்கம் !

276

ஆர்.கே.நகரில் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடைபெறும் சூழல் தற்போது இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியல் சட்டத்தின் 324 ஆவது பிரிவின் கீழ் ஆர்.கே.நகர். இடைத்தேர்தல் ரத்து செய்யப்படுவதாகவும், பெரும்பாலான பகுதிகளில் நூதனமான முறையில் பணம், பரிசுப்பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வருமானவரித்துறை அளித்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள தேர்தல் ஆணையம், மக்கள் பிரதிநிதித்துவச்சட்டம் 1951 பிரிவு 21-இன் கீழ் அதிகாரத்தை பயன்படுத்தி இந்த இடைத்தேர்தலை ரத்து செய்துள்ளதாக கூறியுள்ளது.
நியாயமாக,நேர்மையாக தேர்தல் நடைபெறும் சூழல் இப்போது இல்லை என்றும், அத்தகைய சூழல் வந்த பிறகு ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
தற்போது தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஆர்.கே.நகரில் பிறப்பிக்கப்பட்டிருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் விளக்கிக்கொள்ளப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளது.