விலைவாசி உயர்வுக்கு பெரிய வணிக நிறுவனங்களின் பதுக்கல்களே காரணம் என வணிகர்கள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

249

விலைவாசி உயர்வுக்கு பெரிய வணிக நிறுவனங்களின் பதுக்கல்களே காரணம் என வணிகர்கள் சங்கத் தலைவர் விக்கிரமராஜா குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் மளிகை சில்லரை வியாபாரிகளின் சங்கத்தின் தலைவர் மகாசபை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு விக்கிரமராஜா பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணம் சிறிய வணிகர்கள்அல்ல என்றும், பெரிய வணிக நிறுவனங்களின் பதுக்கல்களே காரணம் என்றும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், பொருட்களை பதுக்கி வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலை விரைவில் வெளியிடப்போவதாகவும் என அவர் கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளாக வணிகர்கள் நல வாரியம் செயல்படாமல் உள்ளதாக அவர் வருத்தம் தெரிவித்தார். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு நடைபெற்றுவரும் அனைத்து போராட்டங்களுக்கும் வணிகர்கள் பேரமைப்பு ஆதரவு அளிக்கும் என விக்கிரமராஜா தெரிவித்தார்.