விளைநிலங்களில் புகுந்து பயிர் சேதம் மற்றும் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் விலங்குகளை கொல்ல மத்திய அரசு, தமிழகத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

183

கிருஷ்ணகிரி மாவட்டம் காடுகளும், மலைகளும் சூழ்ந்த பகுதியாகும். இந்த பகுதி ஏராளமான யானைகள், காட்டுப்பன்றிகள், கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகளின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்த விலங்குகள் விளை நிலங்கள் மற்றும் விவசாயிகளின் உயிர்களுக்கு சேதத்தை ஏற்படுத்துவது வாடிக்கையாகி விட்டது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா, அசாம், கேரளா, ஆந்திரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் பொதுமக்களின் உயிருக்கும், விளைநிலங்களுக்கும் சேதம் விளைவிக்கும் வனவிலங்குகளை கொல்ல மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதேபோல், தமிழகத்திற்கும் அனுமதி வழங்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராம கவுண்டர் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன், விவசாய நிலங்களுக்கு சேதம் விளைவிக்கும் குரங்கு மற்றும் பறவைகளை சுட்டு கொல்ல அனுமதி தர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.