உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு 18 % வரி விதிப்பை ஏற்க முடியாது – தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா

178

உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிப்பதை ஏற்று கொள்ள முடியாது என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

கோவை கொடிசியா வளாகத்தில் நடைபெற்று வரும் பேக்கிரி தொழில்நுட்ப கண்காட்சியை அவர் பார்வையிட்டார். இதையடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய விக்கிரமராஜா, மத்திய மாநில அரசுகளால் கடைபிடிக்க முடியாத அளவிற்கு உணவு தரக்கட்டுப்பாடு உள்ளது என்றார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பீட்சா உள்ளிட்ட உணவு பொருட்களுக்கு ஐந்து சதவீதம் ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படுவதாக கூறிய அவர், உள்நாட்டு உற்பத்தி பொருட்களுக்கு 18 சதவீதம் வரி விதிப்பை ஏற்று கொள்ள முடியாது என குறிப்பிட்டார்.