வெளி நாட்டு ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக… உள் நாட்டு ஆன்லைன் வர்த்தகம் தொடக்கம்…

173

வெளிநாட்டு ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக உள்நாட்டு ஆன்லைன் வணிகத்தை தொடங்கியுள்ளதாக தமிழ்நாடு வணிகர் சங்கப்பேரமைப்புத் தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

சென்னை தி.நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் அன்னிய சக்திகள் உள் வரக்கூடாது என்பதற்காக மெரினா என்ற செயலியை துவங்கியுள்ளதாக கூறினார். எங்கள் வணிகம், எங்கள் நாடு என்ற அடிப்படையில் குழு அமைக்கப்பட்டு இந்த பணியில் செயல்பட்டு வருவதாகவும் விக்கிரமராஜா கூறினார். சோதனை என்ற பெயரில் வணிகர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம் சாட்டிய அவர், ஜி.எஸ்.டி. வரி விதிதைப்பு குறித்து பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறினார். இது குறித்து, மீண்டும் அமைச்சர்களை சந்தித்து முறையீடு செய்ய உள்ளதாகவும் பலன் கிடைக்காத பட்சத்தில் 20-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்றும் விக்கிரமராஜா கூறினார்.