உலக ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

163

ஆசிய விளையாட்டுப்போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் விகாஸ் கிருஷ்ணன், அஜர்பைஜான் நாட்டில் பாஹீ நகரில் நடைபெற்று வரும் உலக ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் பங்கேற்று வருகிறார்.
இதில், விகாஸ் கிருஷ்ணன் ஜார்ஜியா நாட்டு வீரரை எதிர்கொண்டார். போட்டியில் ஜார்ஜியா வீரரை 3-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் விகாஸ் கிருஷ்ணன் வீழ்த்தினார்.
இதன் மூலம் உலக ஒலிம்பிக் தகுதி சுற்றுப் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது இந்திய குத்துச்சண்டை வீரர் என்ற பெருமையை விகாஸ் கிருஷ்ணன் அடைந்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் 75 கிலோ பிரிவில் கலந்து கொள்வதற்கு விகாஸ்கிருஷ்ணன் இன்னும் ஒரு வெற்றி பெறவேண்டும். இந்நிலையில், தகுதிப்போட்டியில் கடைசி எட்டு சுற்றுக்கு முன்னேறிய அவர், கொரியாவின் லீ டோங்யுன் உடன் பலப்பரிட்சை நடத்த உள்ளார்.