கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்த விஜய் மல்லையா..!

261

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளித்த விஜய் மல்லையாவைச் சூழ்ந்த ரசிகர்கள் திருடன் எனக் கூறி முழக்கமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுத்துறை வங்கிகளில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் கடன்பெற்றுத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் குடியிருந்து வருகிறார். அவரை விசாரணைக்காக இந்தியா அழைத்துவரும் முயற்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் விளையாடிய உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை விஜய் மல்லையா நேரில் கண்டுகளித்தார். போட்டி முடிந்தபின் தன் தாயுடன் விளையாட்டு மைதானத்தைவிட்டு வெளியே வந்த மல்லையாவைச் சூழ்ந்துகொண்ட ரசிகர்கள், திருடன் திருடன் எனக் கூறி முழக்கமிட்டனர். இது குறித்து விஜய் மல்லையாவிடம் செய்தியாளர்கள் கேட்டதற்குத், தனது தாயின் மனம் புண்படாமல் பார்த்துக் கொண்டதாகத் தெரிவித்தார்.