விஜய் மல்லையாவுக்கு எதிரான செக்மோசடி வழக்கு. சம்மனை ரத்து செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு

237

செக் மோசடி வழக்கில் விஜய் மல்லையாவுக்கு எதிரான சம்மனை ரத்து செய்ய முடியாது டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
பல்வேறு வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிவிட்டு லண்டனில் தலைமறைவு வாழ்க்கை நடத்தும் தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றங்களில் நடைபெற்று வருகின்றன. அவரது கிங்பிஷர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சார்பில் டெல்லி விமானநிலையத்துக்கு வழங்கப்பட்ட ஒரு கோடி ரூபாய்க்கான காசோலை, பணம் இல்லாததால் திரும்பி வந்தது. இதையடுத்து, விஜய் மல்லையாவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அவர் ஆஜராக வேண்டும் என டெல்லி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதை எதிர்த்து விஜய் மல்லையா தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ்.தெஜி, கீழ் நீதிமன்றம் சம்மன் அனுப்பிய விவகாரத்தில் எந்த வித சட்டவிரோதமும் இல்லை என்பதால், சம்மனை ரத்து செய்ய முடியாது என தீர்ப்பளித்தார். எனவே, விஜய் மல்லையா நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.