வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ புதிய வழக்கு ஒன்றை விஜய் மல்லையா மீது பதிவு செய்துள்ளது.

297

வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ புதிய வழக்கு ஒன்றை விஜய் மல்லையா மீது பதிவு செய்துள்ளது.
பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா வங்கிகளில் வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாமல் லண்டனுக்கு தப்பியோடிவிட்டார்.
தற்போது அங்கு வசித்து வரும் மல்லையாவின் பாஸ்போர்ட்டை ஏற்கனவே முடக்கப்பட்டு, இந்திய அரசால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், விஜய் மல்லையா கடனை திரும்ப செலுத்தாதது குறித்து ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ புதிய வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அமலாக்க துறை பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தும் அவர் ஆஜராகாமல் இருந்து வருகிறார். அத்துடன் மல்லையாவின் ஆயிரத்து 400 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. டெல்லி நீதிமன்றம் கடந்த வாரம் ஜாமினில் வெளிவர முடியாதபடி விஜய் மல்லையாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.