உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

180

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னரே கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம் திருத்தணி பகுதியில் மர்ம காய்ச்சலால் 200 பேருக்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்தனர். இந்தநிலையில், தேமுதிக மகளிர் அணி தலைவி பிரேமலதா விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுபவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார். பால், பழம், ரொட்டி உள்ளிட்டவற்றை அவர்களுக்கு வழங்கிய அவர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, அரசு பொது மருத்துவமனைகளை தரம் உயர்த்தவேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரேமலதா, கொசுத்தொல்லை காரணமாக சுகாதாரமற்ற நிலை நிலவி வருவதால், அரசு தனி கவனம் செலுத்தவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கர்நாடக, ஆந்திர, கேரளா ஆகிய மாநிலங்கள் தடுப்பணை கட்ட முயற்சிப்பதால், நதிநீர் இணைப்பு அவசியம் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தினார்.