தகுதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்க கூடாது – எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரிக்கை.

577

தகுதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் எச்சரித்துள்ளார்..

சென்னை நந்தனம் அரசு கல்லூரியில் மேற்கு மற்றும் தென்மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலங்களின் எல்லைக்குட்பட்ட பள்ளி வாகனங்களின் தரம் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்று பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தனர். அப்போது வாகனங்களில் தீ பிடித்தால் எவ்வாறு அணைப்பது என்பது குறித்து ஓட்டுநர்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தகுதி சான்றிதழ் இல்லாமல் பள்ளி வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.