ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் : தேமுதிக தலைவர் விஜயகாந்த்

233

ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தமிழகத்தில் அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் போன்ற பொருட்கள் சமீப காலமாக சரிவர கிடைப்பதில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
இதனால் ஏழை, நடுத்தர குடும்பங்கள் மிகவும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள அவர், தமிழகத்தில் ஆட்சி மாறினாலும், மக்களின் நிலை மாறுவதில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.
ரேஷன் பொருட்களை சரியான முறையில் மக்களுக்கு சென்றடைய செய்து, தட்டுப்பாடில்லாத நிலமையை உருவாக்க வேண்டும் எனவும், ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் அனைவருக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.