ஆனைமலை நல்லாறு திட்டத்தை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை : விஜயகாந்த் குற்றச்சாட்டு …!

956

காமராஜர் கொண்டு வந்த ஆனைமலை நல்லாறு திட்டத்தை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருப்பூர் மாவட்டம் ஆனைமலை நல்லாறு திட்டத்தை செயல்படுத்தாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து உடுமலையில் தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
vijayakanth
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் மாட்டுவண்டியில் வந்தனர். ஆர்ப்பாட்டத்தில் பேசிய விஜயகாந்த், காமராஜர் கொண்டு வந்த ஆனைமலை நல்லாறு திட்டத்தை திமுக, அதிமுக அரசுகள் நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான தேமுதிக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.