ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் : விஜயகாந்த் வலியுறுத்தல்..

650

ஒகி புயலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிக செய்யும் என குறிப்பிட்டுள்ளார்.
புயலின் தாக்கத்தால் உடமைகளை இழந்து வாடுபவர்களுக்கு பொதுமக்களும் உதவி செய்ய வேண்டும் என விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.
நடுக்கடலில் சிக்கியுள்ள மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ள அவர், ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு போர்க்கால அடிப்படையில் நிவாரணம் வழங்கிட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.