விஜயகாந்த் மியாட் மருத்துவமனையில் அனுமதி..!

441

மீண்டும் கேப்டன் வருவார், அவருக்கு ஒன்றும் ஆகாது, தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என விஜயகாந்த் மகன் பிரபாகரன் உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக, நேற்று இரவு சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டாலும், வலைதளங்களில் அவரது உடல் நிலை குறித்து பல்வேறு தகவல்கள் பரவி வருகிறது. இந்த நிலையில், விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார். வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தலைமைக் கழகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, நெல்லூரில் இருந்து விஜயகாந்த் மகன் விஜய் பிரபாகரன் வெளியிட்டுள்ள வீடியோவில், தேவையில்லாமல் தவறான தகவலை பரப்பி விடுவதால் என்ன நன்மை? என்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது தந்தை உடல் நலம் சரியில்லாமல் இருந்தது உண்மைதான் என்று கூறியுள்ள அவர், ஆனால் வயதானவர் போல படுக்கையில் இருப்பதாக இஷ்டத்திற்கு பேசி வருவது வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளார். மீண்டும் கேப்டன் வருவார், அவருக்கு ஒன்றும் ஆகாது, தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என விஜய் பிரபாகரன் உருக்கமாக தெரிவித்துள்ளார்.