தன்னை வாழவைத்த கலைத்துறையை நிச்சயம் காப்பேன் – தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்..!

469

தன்னை வாழவைத்த கலைத்துறையை நிச்சயம் காப்பேன் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜயகாந்தின் நாற்பது ஆண்டுகால திரையுலக பயணத்தை பாராட்டி காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் விழா நடைபெற்றது. இதில், தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த், தன்னை வாழவைத்த கலைத்துறையை நிச்சயம் காப்பேன் என உறுதியளித்தார்.

இந்த நிகழ்ச்சியில், திரைத்துறையை சேர்ந்த இயக்குனர் எஸ்.பி.முத்துராமன், தயாரிப்பாளர் தாணு, நடிகர் சங்க தலைவர் நாசர், பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, நடிகர்கள் சத்யராஜ், சரத்குமார், நடிகை அம்பிகா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு விஜயகாந்தின் திரையுலக பயணத்தை பாராட்டி பேசினர்.