காவிரிக்காக தமிழகமே கொந்தளிக்கும் போது, சூரப்பா நியமனம் தேவையா – தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கேள்வி ..!

971

காவிரிக்காக தமிழகமே கொந்தளிக்கும் போது, சூரப்பா நியமனம் தேவையா என தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த சூரப்பாவை, அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆளுனர் நியமித்ததற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் சூரப்பா நியமனத்தை ஆளுநர் திரும்ப பெற வலியுறுத்தி, விஜயகாந்த் தலைமையில் தே.மு.தி.கவினர் கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயன்றனர். அப்போது அவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும், தேமுதிகவினர் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பின்னர் விஜயகாந்த், பிரேமலதா உள்பட தேமுதிக தொண்டர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விஜயகாந்த், நிர்மலா தேவி சர்ச்சை விவகாரத்தில் முழு விசாரணை தேவை என்று வலியுறுத்தினர். இது தொடர்பாக சம்பந்தவட்டவர்கள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதனையடுத்து பேசிய , பிரேமலதா விஜயகாந்த் மத்திய பா.ஜ.க அரசு தமிழகத்திற்கு துரோகம் செய்து வருவதாகவும், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை ஆளுநர் திரும்ப பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.