விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி !

103

இலங்கையில் விடுதலை புலிகள் குறித்த பேசிய விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப் புலிகள் மீண்டும் வர வேண்டும் என்று உரையாற்றியிருந்தார். இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து, அவர் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில் இலங்கையில் அதிபர் சிறிசேனா தலைமையில் 27 நபர் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது.இந்த புதிய அமைச்சரவையில் ரனில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி இடம் பெற்றுள்ள ஐக்கிய தேசிய முன்னணியை சேர்ந்தவர்களும் இடம் பெற்றுள்ளனர். இதில் பதவியிலிருந்து நீக்கப்பட்ட விஜயகலா மகேஸ்வரனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி ராஜாங்க அமைச்சராக அவர் மீண்டும் பதவியேற்றுக்கொண்டார்.