இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு-விஜயகாந்த்!

165

இலவசத் திட்டங்கள் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தில் முறைகேடு நடப்பதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 34 ஆயிரத்து 887 ரேஷன் கடைகள் உள்ளதாகவும், இவற்றின் மூலம், 1 கோடியே 98 லட்சத்து 76 ஆயிரத்து 68 குடும்ப அட்டைகளுக்கு விலையில்லா பொருட்கள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு கார்டுக்கு 3 முறை விலையில்லா இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டதா?
அல்லது ஒரே குடும்பம் 3 குடும்ப அட்டைகளை வைத்துக்கொண்டு, விலையில்லா பொருட்களை பெறுகிறதா? என்பதை,
போர்க்கால அடிப்படையில் ஆய்வுசெய்து பதிலளிக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தமிழக அரசும் மாவட்ட ஆட்சியர்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.