பணிக் கொடையை தொழிலாளர்களுக்கு ஓய்வு பெரும் அன்றே வழங்க அரசு உத்தரவிட வேண்டும் – விஜயகாந்த்

182

பணிக் கொடையை தொழிலாளர்களுக்கு ஓய்வு பெரும் அன்றே வழங்க அரசு உத்தரவிட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தினார்.

இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாட் வரியினால், நாள் ஒன்றுக்கு சுமார் 3 கோடியே 19 லட்சம் ரூபாயும், ஆண்டுக்கு ஆயிரத்து 148 கோடியே 76 லட்சம் ரூபாயும் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது என தெரிவித்துள்ளார். இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து வாட் வரி விதிப்பதை தவிர்த்து இழப்பை கட்டுப்படுத்த வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.

வருடத்திற்கு 210 கோடி ரூபாய் தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து நிர்வாக செலவுக்கு பயன்படுத்துவதாக குற்றம்சாட்டியுள்ள விஜயகாந்த், போக்குவரத்து மானியக் கோரிக்கை விவாதத்தின் போது தமிழக அரசு, பணிக் கொடையை தொழிலாளர்கள் ஓய்வு பெரும் அன்றே வழங்க உத்தரவிட வேண்டும் என அவர் கேட்டுகொண்டார்.