நீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் : சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை

328

நீட் தேர்வு விவகாரத்தில் விரைவில் நல்ல முடிவு கிடைக்கும் என்று, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கொடுங்கையூர் விபத்தில் தீக்காயம் அடைந்து சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை அவர் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கர், கொடுங்கையூர் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் கட்டுக்குள் உள்ளதாக குறிப்பிட்ட அவர், நீட் தேர்வு விவகாரத்தால், மருத்துவ மாணவர்களின் கலந்தாய்வு பாதிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.