கொடுங்கையூர் பேக்கரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

143

கொடுங்கையூர் பேக்கரி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த கொடுங்கையூரில் உள்ள பேக்கரில் ஏற்பட்ட தீ விபத்தில், சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதில், தீயணைப்பு படை வீரர் ஒருவர் மரணம் அடைந்தார். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். அவர்களில் பலர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அமைச்சர் விஜயபாஸ்கர் 2வது நாளாக சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், 12 பேர் கொண்ட மருத்துவ குழு மூலம் காயமடைந்தவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
இதனிடையே, விபத்தில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், காவல்துறை போன்று தீயணைப்பு துறையையும் நவீனமாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.