செவிலியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த தயார் -சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கர்!

276

உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த, அரசு தயாராக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
2015ம் ஆண்டு 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் மாநிலம் முழுவதும் பணியில் அமர்த்தப்பட்டனர். 2 ஆண்டுகள் கடந்த நிலையில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்களுக்கு இதுவரை சம்பள உயர்வு, பணி நிரந்தரம் உள்ளிட்டவைகள் அரசு சார்பில் வழங்கப்படவில்லை. இந்தநிலையில், பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் செவிலியர்கள் நேற்று முதல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய நடைபெற்ற செவிலியர்கள் போராட்டம், இரண்டாவது நாளாக தொடர்கிறது.
இதனிடையே சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் எனத் தெரிவித்தார்.