வருமானவரித்துறை அலுவலகத்தில் விஜயபாஸ்கர் மனைவி ஆஜர் !

219

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் மனைவி சென்னை வருமானவரித்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகியுள்ளார்.
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் கடந்த மாதம் சோதனை நடத்தினர். இதில், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா தொடர்பாக முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். இதையடுத்து, வருமானவரித்துறை அலுவலகத்தில் இரண்டு முறை நேரில் ஆஜராகி விஜயபாஸ்கர் விளக்கம் அளித்தார். இந்நிலையில், விஜயபாஸ்கர் மனைவி ரம்யாவுக்கு வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று சம்மன் அனுப்பினர். அதில், வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தொடர்பாக நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், சென்னையில் உள்ள வருமானவரித்துறை அலுவலகத்தில் ரம்யா இன்று ஆஜராகியுள்ளார். இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.