தமிழகத்தில் விரைவில் 4 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

258

தமிழகத்தில் விரைவில் 4 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சட்டபேரவையில் உறுப்பினர் நரசிம்மன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஆயிரத்து 806 சுகாதார நிலையங்கள் இருப்பதாக கூறினார். 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் இயங்கி வருவதாக தெரிவித்த அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு ஒன்றியத்திற்கு 2 சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்று குறிப்பிட்டார். புதிதாக புதிதாக 4 ஆயிரம் செவிலியர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் அவர் அறிவித்தார்.

இதனிடையே மேல்நிலை பள்ளி பாடத் திட்டத்தில் ஜவுளி மேலாண்மையை புதிய பாடப்பிரிவாக உருவாக்க அரசு ஆவண செய்யுமா என சட்ட மன்ற உறுப்பினர் சக்திவேல் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், ஏற்கானவே இந்த பாடப்பிரிவு பயன்பாட்டில் உள்ளதாக தெரிவித்தார். 12 புதிய பாடத்திடடங்களை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.