அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் 2 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது – அமைச்சர் விஜயபாஸ்கர்

212

ஓமந்தூரார் அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் 2 ஆயிரம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் உள்ள அம்மா முழு உடல் பரிசோதனை மையத்தில் தானியங்கி ரத்த பிரிவு பகுப்பாய்வை சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோயம்புத்தூர், மதுரை, சேலம் ஆகிய இடங்களிலுல் அம்மா முழு உடல் பரிசோதனை மையம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று கூறினார். மேலும் தி.மு.க. தலைவர் கருணாநிதி செயற்கை சுவாசம் ஏதுமின்றி தாமாகவே சுவாசித்து வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.