தமிழகத்தில் காச நோயை ஒழிக்க போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்

134

தமிழகத்தில் காச நோயை ஒழிக்க போர்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்துள்ள சானிடோரியத்தில் உள்ள அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் உள்கட்டமைப்பு மற்றும் உள்நோயாளிகள் பிரிவினை நவீனப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், 2025 ஆம் ஆண்டுக்குள் காச நோயை ஒழிக்க வேண்டும் என்ற பிரதமர் மற்றும் முதலமைச்சரின் எண்ணத்தை நிவர்த்தி செய்ய போர்க்கால அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார். கடந்த 3 மாதங்களில் 1000 காசநோயாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், மாதம் 500 ரூபாய் மதிப்பிலான ஊட்டச்சத்து உணவுகள் அவர்களுக்கு வழங்கப்படுகிறது என்றார்.