தமிழகத்தில் நிஃபா வைரஸ் தொற்று இல்லை – சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

133

தமிழகத்தில் நிஃபா வைரஸ் தொற்று வாய்ப்பு இல்லை என, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதிபட தெரிவித்துள்ளார்.

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அமைச்சர் விஜயபாஸ்கர் புதுப்பிக்கப்பட்ட கதிர்வீச்சியல் கட்டடத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து அதிநவீன மருத்துவ உபகரணங்களை, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அவர் அர்ப்பணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ரத்த நாளங்களில் உள்ள நோய்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும், சுமார் 8 கோடியே 68 லட்சம் மதிப்பிலான கருவிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

புற்றுநோயை அறிமுக நிலையிலேயே கண்டறியக்கூடிய உபகரணங்களை விரைவில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நிஃபா வைரஸ் தொற்று வாய்ப்பு தமிழகத்தில் ஏதும் இல்லை என குறிப்பிட்ட அவர், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார்.