வருமானத்துக்கு அதிகமான ஆவணங்கள் எடுத்துச்செல்லப்படவில்லை : அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை

183

வருமானத்துக்கு அதிகமான ஆவணங்கள் எதுவும் தங்களிடம் இருந்து எடுத்துச்செல்லப்படவில்லை என்று அமைச்சர் விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு, திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரி, கல்லூரி உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். இதில், தேர்தல் தொடர்பான சில ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விஜயபாஸ்கரின் தந்தை சின்னதம்பி, முறையான ஆவணங்கள் மற்றும் கணக்கு வழக்குகள் தங்களிடம் உள்ளதாக கூறினார். வருமானத்துக்கு அதிகமான ஆவணங்கள் எதுவும் எடுத்துச்செல்லப்படவில்லை எனவும் அவர் விளக்கம் அளித்தார்.