அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு வருமான வரித்துறை கடிதம்

99

அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு வருமான வரித்துறை எழுதி உள்ள கடிதத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்ற சோதனையில், தேர்தலுக்கு 89 கோடி ரூபாய் பணம் பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் சிக்கின. இந்த வருமானவரித்துறை சோதனையின் போது ஆவணங்களை அழிக்க முயற்சித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனையடுத்து, புதுக்கோட்டையில் அமைச்சருக்கு சொந்தமான குவாரியில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட ஆயிரம் மடங்கு அதிகமாக கல் எடுக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சர் விஜயபாஸ்கர் உதவியாளரிடம் இருந்து ஏராளமான பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளநிலையில், அவர் பல்வேறு தரப்பினரிடம் இருபது கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு வருமானவரித்துறை கடிதம் எழுதியுள்ளது.