தவறான அறுவை சிகிச்சையின் காரணமாக கண்பார்வை இழந்தவர்களுக்கு தமிழக அரசு 25 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த வலியுறுத்தியுள்ளார்.

16955

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான அறுவை சிகிச்சையால், 18 பேர் கண்பார்வை இழந்துள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு காரணமானவர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

விஜயகாந்த் வலியுறுத்தல்:
மேட்டூர் அரசு மருத்துவமனையில் தவறான அறுவை சிகிச்சையால் 18 பேரின் கண்பார்வை இழப்பு
தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்

அத்துடன், பாதிக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் 25 லட்ச ரூபாயை தமிழக அரசு நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் விஜயகாந்த் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.