விஜய் சேதுபதியின் பெண் கதாபாத்திர படங்கள் வெளியீடு : சமூக வலைத்தளங்களில் பெரும் வரவேற்பு

394

தியாகராஜன் குமாரராஜா படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தின் முன்னோட்ட படங்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதில் பெண்ணாக நடித்து வரும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் முன்னோட்ட படங்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு சமூக வலைதளத்தில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஷில்பா என்ற திருநங்கை வேடத்தில் அவர் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் விஜய் சேதுபதியுடன், பகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வருவதாகவும், சூப்பர் டீலக்ஸ் என்று படத்திற்கு தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.