விஜய் மல்லையாவின் சொத்துக்களை வரும் 4ம் தேதி ஏலம் விட வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

364

விஜய் மல்லையாவின் சொத்துக்களை வரும் 4ம் தேதி ஏலம் விட வங்கிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஸ்டேட் வங்கி உள்ளிட்ட 17 வங்கிகளுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தொகையை செலுத்தாமல் விஜய் மல்லையா மோசடி செய்துள்ளார். இதையடுத்து, அவரது சொத்துகளைக் கைப்பற்றிய வங்கிகள் ஏற்கெனவே ஒருமுறை ஏலத்துக்கு கொண்டு வந்தன. இந்நிலையில் விஜய் மல்லையாவின் சொத்துக்களை வரும் 4ம் தேதி மீண்டும் ஏலம்விட வங்கிகள் திட்டமிட்டுள்ளன. மும்பையில் உள்ள கிங் ஃபிஷர் இல்லத்துக்கு 150 கோடி ரூபாய் விலையாக நிர்ணயித்த போது ஏலம் யாரும் எடுக்காததால், அதன் விலை 135 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய் மல்லையா பயன்படுத்திய 8 சொகுசு கார்களும் ஏலத்தில் விடப்படுகின்றன. கோவாவில் உள்ள சொகுசு பங்களா, கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் விளம்பரச் சின்னம், விளம்பர வாசகம் ஆகியவற்றையும் ஏலத்திடல் விட வங்கிகள் திட்டமிட்டுள்ளன.