வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை மீண்டும் ஏலத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது.

262

வங்கிகளிடம் 9 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள விஜய் மல்லையாவின் சொகுசு விமானத்தை மீண்டும் ஏலத்தில் விட முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பிரபல கிங்பிஷர் நிறுவன அதிபர் விஜய் மல்லையா தனது நிறுவனத்துக்காக வங்கிகளில் 9 ஆயிரம் ரூபாய் கடனை பெற்று ஊழல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டார். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், அவர் லண்டனுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து மல்லையாவின் பாஸ்போர்ட் முடக்கப்பட்டது. இந்த நிலையில் இந்தியாவில் உள்ள அவரது சொகுசு விமானங்கள், ஆடம்பர பங்களாக்கள், ஏலத்தில் விடப்பட்டன. இதில் அவரது சொகுசு விமானத்தை ஏலத்தில் எடுப்பதற்கான குறைந்தபட்ச விலை 152 கோடி ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் அதிக விலையின் காரணமாக விமானத்தை வாங்க யாரும் முன்வரவில்லை. இந்த நிலையில், விமானத்துக்கான விலையை சற்று குறைத்து, வரும் 28 மற்றும் 29 தேதிகளில் ஆன்லைன் மூலம் ஏலம்விட சேவை வரித்துறை தீர்மானித்துள்ளது.