தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர லண்டனுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விரைந்துள்ளனர்

286

9 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக்கடனை பெற்று தலைமறைவாகி இருக்கும், தொழிலதிபர் விஜய் மல்லையாவை இந்தியா அழைத்து வர லண்டனுக்கு சி.பி.ஐ அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து சுமார் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று திருப்பி செலுத்தாமல் இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையா லண்டனில் தலைமறைவாகி உள்ளார். இவரை கைது செய்து இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய வெளியுறவுதுறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் விஜய் மல்லையா அந்நிய செலாவணி கட்டுப்பாடுகளை மீறி நடந்துகொண்டதாக கூறி அவர் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை ஏப்ரல் 13-ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த நிலையில், அவரது வழக்கு மீதான கூடுதல் ஆவணங்களை சமர்பித்து இந்தியா அழைத்து வருவதற்காக சி.பி.ஐ அதிகாரிகள் லண்டனுக்கு விரைந்துள்ளனர். இவர்களுடன் அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளும் லண்டன் சென்றுள்ளனர்.