விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை..!

319

விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கு தொடர்பாக லண்டன் நீதிமன்றத்தில் இன்று முக்கிய விசாரணை நடைபெறுகிறது.

இந்திய வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர் விஜய் மல்லையா, கடந்த ஆண்டு இங்கிலாந்துக்கு தப்பிச்சென்றார். அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு மத்திய அரசு இங்கிலாந்தை கேட்டுக்கொண்டது. இந்தியா அளித்த புகாரின் பேரில் ஸ்காட்லாந்து யார்டு போலீசார் மல்லையாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் அவரை நாடு கடத்தக்கோரும் வழக்கின் விசாரணை லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 2.30 மணிக்கு நீதிமன்றம் விசாரணையை தொடங்கவுள்ளது.