நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா திரைப்படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

187

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பைரவா திரைப்படத்தின் ட்ரைலர் இணையதளத்தில் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.
தெறி படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய்யின் 60-வது திரைப்படமான பைரவா இயக்குனர் பரதன் இயக்கத்தில் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளதை அடுத்து, பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் புத்தாண்டு இப்படத்தின் ட்ரைலர் நேற்று நள்ளிரவு இணையதளத்தில் வெளியானது. பஞ்ச் டயலாக் மற்றும் அதிரடி ஆக்சன் கலந்து அமைந்துள்ள பைரவா படத்தின் ட்ரைலர், இணையதளத்தில் வெளியான 15 மணி நேரத்திற்குள் 23 லட்சம் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இந்த டிரைலரை இதுவரை 1 லட்சத்து 67 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.