தமிழகத்தில் தற்போது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் தெரிவித்துள்ளார்.

196

தமிழகத்தில் தற்போது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள அறிக்கையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர்ராவ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் நிலவரம் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் மீண்டும் ஒரு அறிக்கையை அனுப்பி உள்ளார்.

அந்த அறிக்கையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் , அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகள் அளித்த
தகவல்களை குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் அனுப்பியுள்ள 3 பக்க அறிக்கையில் தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் முடிவெடுப்பது சிரமம் என தெரிவித்துள்ளார்.

தற்போது சசிகலாவை ஆட்சி அமைக்க அழைக்க இயலாது என கூறியுள்ள ஆளுநர் வித்யாசாகர்ராவ், சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுதியில் எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை நடத்துமாறு
டி.ஜி.பிக்கு உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.