தமிழக அரசியலில் மத்திய அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.

222

தமிழக அரசியலில் மத்திய அரசு உள்நோக்கத்தோடு செயல்படுவதாக, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை, உள்ள தனது கட்சி அலுவலகத்தில், மாலைமுரசு தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அவர், மத்திய அரசு தமிழக அரசியலை உள்நோக்கத்தோடு அணுகுவதாக குற்றம் சாட்டினார். இதை பாஜக தலைவர்களின் செயல்பாடுகள் விளக்குவதாக திருமாவளவன் கூறினார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திய அவர், தமிழக அரசு சுதந்திரமாக செயல்பட மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.