பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.

275

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் ஆளுநர் வித்யாசாகர் ராவ் மும்பையில் இருந்து சென்னை புறப்பட்டுச் சென்றார்.
முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பரபரப்பு பேட்டி, அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம், பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு முதலமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க எடுக்கப்படும் முயற்சிகள் என தமிழக அரசியல் சூழ்நிலை பரபரப்புடன் காணப்படுகிறது. இது தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விடை அளிக்கும் விதமாக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகம் வருகிறார். மும்பையில் இருந்து சென்னை வரும் அவர், முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை மாலை 5 மணிக்கு சந்திக்கிறார். இதைத்தொடர்ந்து அதிமுக பொதுச் செயலாளர் சசிகாவை 7.30 மணிக்கு சந்தித்து பேசுகிறார். இதைத்தொடர்ந்து புதிய அமைச்சரவைக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது உள்ளட்டவை பற்றி ஆளுநர் முடிவெடுப்பார் எனத் தெரிகிறது.