பள்ளி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை | ஆசிரியை திட்டியதால் விபரீதம் !

195

ஆரணி அருகே ஆசிரியை திட்டியதால் மனமுடைந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேர்ப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சத்தியசீலன் என்பவரது மகள் மலர். இவர் ஆரணியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், பள்ளியில் ஆசிரியை ஒருவர் மலரை திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மலர் வீட்டில் தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதனால் மனமுடைந்த அவர், வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.