வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் 40 நாட்களுக்கு கோடை விடுமுறை ..!

921

வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் 40 நாட்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ் 1 மற்றும் பிளஸ்டூக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து விட்டன. இதே போல் 10 வகுப்பு மாணவர்களுக்கும் நாளையுடன் பொதுத்தேர்வு முடிவடைகிறது. மற்ற வகுப்புகளுக்கும் கடைசி தேர்வு நாளையுடன் நிறைவடைகிறது. இதனால் 21ம் தேதி முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிகக்ப்பட்டுள்ளது. வழக்கமாக ஏப்ரல் மாதம் இறுதிவரை பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும். ஆனால் இந்த முறை 10 நாட்களுக்கு முன்னதாகவே அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு முடிக்கப்பட்டுள்ளது.கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் தேர்வுகளை முன் கூட்டியே நடத்தி முடித்து விட்டனர். இதனால் மாணவர்களுக்கு ஏப்ரல் 21ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை 40 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.