அதிமுக இரு அணிகள் குறித்த பேரம் துபாயில் அரங்கேறியுள்ளதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.

1375

அதிமுக இரு அணிகள் குறித்த பேரம் துபாயில் அரங்கேறியுள்ளதாக தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை அடையாறில் உள்ள தினகரன் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதி விசாரணைக்கு முதலில் மறுத்து விட்டு தற்போது ஒப்புதல் வழங்கியது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளிக்கவேண்டும் என்று கூறினார். பெங்களூரு சிறையில் சசிகலா உள்ள நிலையில் போயஸ் கார்டன் இல்லத்தில் அரசு அதிகாரிகள் சென்றதற்கு கண்டனம் தெரிவித்த வெற்றிவேல், சுயநலத்தின் ஒட்டு மொத்த உருவமாக பன்னீர்செல்வம் மாறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.