மயிலாப்பூர் கோவில் சிலை மாற்றப்பட்ட வழக்கு : முன் ஜாமின் கேட்டு வேணுசீனிவாசன் மனு தாக்கல்

544

சென்னை மயிலாப்பூர் கோவில் சிலை மாற்றப்பட்ட வழக்கில் டி.வி.எஸ். குழும தலைவர் வேணுசீனிவாசனை கைது செய்ய விதிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமின் கேட்டு வேணுசீனிவாசன் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போது, 6 வாரங்களுக்கு கைது செய்யக் கூடாது என்று உயர்நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது. வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் இந்து அறநிலையத்துறையிடம் சில ஆவணங் களை கேட்டதாகவும் ஆனால் கால தாமதப்படுத்துவதாகவும் தெரிவித்தார். இதையடுத்து வழக்கில் இந்து அறநிலையத்துறையை சேர்க்க உத்தரவிட்டு, 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.அதுவரை வேணுசீனிவாசனைக் கைது செய்யக் கூடாது என்ற உத்தரவை நீட்டிப்பதாகவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.